'தலைவெட்டும்' பிரச்சனையில் சிக்கிய பாபாராம்தேவ்: ஜாமீனி வெளிவர முடியாத வாரண்ட்
- IndiaGlitz, [Thursday,June 15 2017]
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 2016ஆம் ஆண்டு கூறிய சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் அனைவரும் 'பாரத் மாதா ஜி ஜே' என்ற கோஷத்தை முழங்க வேண்டும் என்று பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி என்பவர் கடவுளை தவிர வேறு யாரையும் வணங்கும் வழக்கம் இஸ்லாமிய மதத்தினர்களுக்கு இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில் பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாபாராம்தேவ், 'பாரத் மாதா கீ ஜெ என்று கூறாதவர்களின் தலையை வெட்டுவேன்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுபாஷ் பத்ரா என்பவர் பாபாராம்தேவின் இந்த பேச்சை கண்டித்து ரோதக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாபாராம்தேவ் ஆஜராகவில்லை. இதனையடுத்து ராம்தேவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததோடு இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உத்தரவிட்டது.