இந்த வாரம் வெளியேற போவது யார்? பிக்பாஸ் நாமினேஷன் தொடங்கியது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படாத நிலையில் இந்த வாரம் வெளியேற்றுபவரை தேர்வு செய்ய இன்று நாமினேஷன் தொடங்கியது.

இன்றைய நாமினேஷனில் அபிராமி, சாக்சி ஆகிய இருவரை மீராமிதுனும், மதுமிதாவை அபிராமியும், மதுமிதா மற்றும் மீராமிதுனை சாக்சியும் நாமினேஷன் செய்தனர். மீராமிதுன் மேல் அபிராமி, சாக்சி ஆகிய இருவரும் கோபமாக இருந்தாலும் நேற்றைய தமிழ்ப்பொண்ணு பிரச்சனையில் சிக்கிய மதுமிதா இன்று அனைவர் பார்வையிலும் வில்லியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கவின், சரவணன் ஆகிய இருவரையும் பாத்திமாபாபு நாமினேஷன் செய்தார். இதற்கான காரணம் இன்றுதான் தெரிய வரும். இவையெல்லாவற்றையும் விட வனிதாவின் நாமினேஷன் தேர்வுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் சேரனை தேர்வு செய்தார். நேற்று கமல்ஹாசன் முன்னிலையில் சேரன் தன் அப்பா, சகோதரர் போல் இருப்பதாக பெருமையாக பேசிய வனிதா, இன்று அவரை நாமினேஷன் செய்தது கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்றைய நாமினேஷனில் யாரிடமும் லாஸ்லியா சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஊட்டியில் மரங்கள் இருந்தும் பயனில்லை: வெற்றிமாறனுக்கு விவேக் பதிலடி!

நடிகர் விவேக் திரைப்படங்களில் நடித்து கொண்டிருப்பதோடு அவ்வப்போது மரங்கள் நடும் சமூக பணியையும் செய்து கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே.

'தர்பார்' படத்தில் மரணமாஸ் பாடல்: எஸ்பிபி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அவருடைய மாஸ் ஓப்பனிங் பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடி வருவது தான் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம்.

தங்க மெடல்களை வென்று குவித்த பிரபல நடிகரின் மகன்!

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் ஏற்கனவே தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் என்பதும்

அடுத்த பிக்பாஸ் வீட்டின் தலைவர் மீராமிதுனா? வனிதாவுக்கு இருக்கு தரமான சம்பவம்!

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அந்த பதவி ஏதோ முதலமைச்சர் பதவி போல் வானாளவிய அதிகாரம் கொண்ட பதவி என நினைத்து கொண்டு வனிதா

நீச்சல் அறிவுரை டுவீட்டை திடீரென நீக்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் சற்றுமுன் தனது மகனுக்கு நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு