தியேட்டர்ல யாரும் போன் பார்க்கக்கூடாது.... விஜய் போனபிறகு என்னவாகும் சினிமா ?
Send us your feedback to audioarticles@vaarta.com
AGS தயாரிப்பு நிறுவனத்தின் 25 வது படம் GOAT ஆகும்.
அர்ச்சனா கல்பாத்தி, AGS தயாரிப்பு நிறுவனத்தின் CEO ஆவார். GOAT திரைப்படத்தின் Creative கூடுதலாக தளபதி விஜயின் தீவிர ரசிகையும் ஆவார்.
GOAT திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளை திரைப்பட ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. நடிகர் விஜய் , இயக்குநர் வெங்கட் பிரபு, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, AGS தயாரிப்பு நிறுவனம் என அனைவரும் இணைந்து GOAT திரைப்படத்தில் கைகோர்த்துள்ளனர்.
Indiaglitz நேயர்களுக்கு AGS தயாரிப்பு நிறுவனத்தின் CEO அர்ச்சனா கல்பாத்தி GOAT உருவான விதம் குறித்தும், நடிகர் விஜய் இல்லாத சினிமா வர்த்தகம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
" இந்த படத்திற்கு எந்தவிதமான அரசியல் நெருக்கடியும் இல்லை. அரசியல் நெருக்கடி என்று யூகத்தின் அடிப்படையில் கிளப்பிவிடுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. உண்மையில், ஷூட்டிங் அனுமதி கேட்ட பொழுதெல்லாம் உடனே கிடைத்தது. காவல்துறை அனுமதி மற்றும் பாதுகாப்பு என எல்லாவிதத்திலும் உதவினார்கள்.
Too much hype is not good for film என்பதை நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். படம் தொடங்கிய முதல் நாள் முதல் அதில் நான் கவனமாக இருந்தேன். இது தளபதி படம். அவர் படத்துக்கு hype தேவையில்லை. எல்லாமே தானா வரும் அவர் படத்திற்கு.
எங்கள் நிறுவனத்தின் 25வது படம் மிகச்சிறந்த படமாக வரவேண்டும் என்று நாங்கள் உறுதியாக இருந்தோம். விஜய் சாருக்கும் அவர் திரைப்பட வாழ்க்கையில் மிகச் சிறந்த படமாக இது இருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறோம்.
இந்த படம் ஆறு நாட்ல போய் ஷூட் பண்ணிருக்கோம். இது எங்களுக்கு புது அனுபவம். ரொம்ப சவாலான விஷயமா இருந்தது. இவ்ளோ பெரிய நடிகர், இவ்ளோ பெரிய crew என எல்லாரையிம் கூட்டிட்டு போய் ஷூட் முடிகிறது ஈசி இல்லை.
மூணு மணி நேரம் எப்படி போகுதேனு தெரியாது. படம் சும்மா பறக்கும். படத்துல ஒர்க் பண்ண டெக்னீசியன் எல்லாம் அவ்ளோ நல்லா வேலை பார்த்துருக்காங்க.
இவ்வாறு GOAT திரைப்படம் குறித்த ஸ்வாரஷ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout