அமைதிக்கான நோபல் பரிசை தட்டிச்சென்ற இரு பத்திரிக்கையாளர்கள்!
- IndiaGlitz, [Friday,October 08 2021]
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இருந்து 2021 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோ எனும் இரு பத்திரிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.
அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அடிப்படையாகக் கருத்துச் சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியமைக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மரிய ரெசா அமெரிக்க பத்திரிக்கையாளர், டிமிட்ரி முராட்டோ ரஷ்ய பத்திரிக்கையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புது கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞானிகளை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் ஸ்பெயின் தலைநர் ஸ்டாக்ஹோமில் இருந்து மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் போன்ற துறைகளுக்கான பரிசு பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பொருளாதாரத்துக்கான பட்டியல் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த இரு பத்திரிக்கையாளர்கள் இடம்பிடித்து உள்ளனர். முன்னதாக தான்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் வளைகுடா நாடுகளில் அகதிகள் படும் அவலத்தைப் பற்றி எழுதியமைக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.