அமைதிக்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற ஐ.நா….

  • IndiaGlitz, [Friday,October 09 2020]

 

2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியல் கடந்த 5 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளில் அமைதிக்கான நோபல் விருதுக்கு எப்போதும் தனிச்சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. காரணம் மற்ற விருதுகள் அவர்களுடைய அறிவுக்காகவும் சமூகத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறைக்காகவும் வழங்கப்படும். ஆனால் அமைதிக்கான விருது முழுக்க முழுக்க சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்ட ஒரு சாதனையாளர்களுக்கோ அல்லது அமைப்புக்கோ அளிக்கப்படும்.

அந்த வகையில் அன்னைதெரசா முதற்கொண்டு பல்வேறு சமூக நல விரும்பிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் விருதை ஐ.நா. அவையின் உணவு நிறுவனமான உலக உணவுத் திட்டத்தற்கு (WFP) வழங்கப்பட இருக்கிறது. காரணம் இந்த உணவு அமைத்திட்டம் மட்டும் இல்லாமல் போய்விட்டால் பல ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் பட்டினியால் சாக வேண்டி வந்திருக்கும்.

வறுமையில் வாடும் பல நாடுகளுக்கு இந்த அமைப்புத்தான் உதவிக்கரம் நீட்டி வருகிறது. மேலும் கொரோனா நேரத்தில் இந்த அமைப்பின் பணி அளப்பரியதாக இருக்கிறது எனப் பல உலக நாடுகள் புகழ்ந்து வந்த நிலையில் தற்போது ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டத்திற்கு 2020 க்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு முன் கடந்த 5 ஆம் தேதி மருத்துவத் துறைக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டர் ஆகிய 3 பேருக்கும் இந்த விருது பகிர்ந்து கொடுக்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஒரு பெண் விஞ்ஞானி இடம் பிடித்து இரந்தார். ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில் மற்றும் ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

அடுத்து கடந்த 7 ஆம் தேதி வேதியியல் துறைக்கான நோபல் விருது பட்டியல் வெளியானது. அது பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் டவுட்னா என்ற இரு விஞ்ஞானிகளுக்கும்இந்த விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு விருதை ஒரு பெண் கவிஞர் சோலாவாகத் தட்டிச் சென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் லூயிஸ் க்ளக் (77) க்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர் 12 கவிதைத் தொகுப்புகள் மற்றும் பல நூறு கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2020 நோபல் விருதுக்கான போட்டியில் உலகம் முழுவதும் 211 தனிநபர்கள் மட்டும் 107 அமைப்புகள் என 318 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் விருது பட்டியல் வெளியாகி விட்டது. இறுதியாக நாளை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சினிமாவில் இருந்து விலகுவதாக சிம்பு பட நாயகி அறிவிப்பு!

சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' மற்றும் 'தம்பிக்கு இந்த ஊரு' 'பயணம்' 'ஆயிரம் விளக்கு' 'தலைவன்' மற்றும் விஷாலின் 'அயோக்யா' உள்பட தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் நடிகை சனாகான்.

டிவிட்டரில் வைரலாகும் இட்லி சண்டை… பிரிட்டனில் இருந்து அமெரிக்கா வரை சூடு பறக்கும் விவாதம்!!!

பிரிட்டனை சேர்ந்த பிரபல வரலாற்று பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தென்னிந்திய உணவான இட்லியை குறைவாக மதிப்பிட்டு ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.

வெளுத்து வாங்கும் சபாநாயகர் நான்சி பெலோசி… அடுத்த பனிப்போர்க்கு தயராகும் வெள்ளை மாளிகை!!!

கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அந்நாட்டு நடாளுமன்றத்தில் கொண்டுவரக் காணரமாக இருந்தவர்

குழந்தை பெத்து வளர்க்க முடியலைன்னா ஏன் பெத்துக்கிறீங்க: பாலாஜி முருகதாஸ் உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி முதல் ஒரு நாள் மட்டுமே அறந்தாங்கி நிஷாவின் காமெடியால் கலகலப்பாக சென்றது. அதற்கு அடுத்த நாளிலிருந்து சொந்த கதை, சோக கதை சொல்லும் படலம் தொடங்கியது.

தனது கால்களை வைத்தே கின்னஸ் சாதனை புத்தகத்தில் தடம் பிடித்த சிறுமி… சுவாரசியத் தகவல்!!!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பலர் உயிரை விட்டு சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.