என் கணவர் இருக்கும்போது கொரோனா என்னை என்ன செய்துவிடும்? கொரோனாவுக்கு பலியான சென்னை பெண்

  • IndiaGlitz, [Tuesday,June 30 2020]

சென்னையைச் சேர்ந்த அரியநாயகி என்ற பெண் கடந்த 1991ம் ஆண்டு அலெக்ஸ் என்பவரை சந்தித்து அவருடன் காதல் ஏற்பட்டதால் அதன்பின் மூன்று வருட காத்திருப்பிற்குப் பின் குடும்பத்தினர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுடைய குடும்பமாக இனிமையாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கடந்த மே 14-ஆம் தேதி அரியநாயகி மூச்சுத்திணறல் காரணமாக மயக்கம் அடைந்தார். அவர் உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கொண்டு செல்லப்பட்ட நிலையில் திடீரென மரணம் அடைந்தார்.

மரணத்திற்கு பின் அவருக்கு கொரோனோ வைரஸ் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த அரியநாயகிக்கு பணியின்போது தான் கொரோனா தொற்று பரவி இருக்கும் என்று நம்பப்படுகிறது

இந்த நிலையில் தனது மனைவியின் இழப்பு குறித்து அலெக்ஸ் கூறும்போது ‘என்னுடைய மனைவி இல்லாமல் மூன்று மகள்களுடன் நான் எப்படி தனியாக இருப்பது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அவ்ர் இல்லாமல் இருக்க கற்றுக் கொண்டிருக்கின்றோம். எனது மூன்று மகள்களும் தங்களது தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதால் அவர்களை சமாதானப்படுத்த அதிக முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது

நான் அவளிடம் பல முறை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவரோ, ‘என்னுடைய கணவர் என்னுடன் இருக்கும் போது எந்த வைரஸ் என்னை என்ன முடியும்? என்று அவர் தைரியமாக சொல்வார். அப்படிப்பட்ட தைரியம் கொண்டவரை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது’ என்று அலெக்ஸ் மிகவும் சோகமாக கூறியுள்ளார்

முதலில் அரியநாயகிக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே உள்ளது என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினார்கள். அதனால் அவரை வீட்டுக்கு திரும்பி செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தோம். ஆனால் திடீரென அவள் இரண்டு நாட்களில் இறந்தது எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி’ என்றும் அலெக்ஸ் கூறினார்.

எனது தாயார் மிக அருமையாக பிரியாணி செய்வார். பக்கத்து வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் பிரியாணி செய்வதற்கு அவரை தான் கூப்பிடுவார்கள் என்று அவரது 20 வயது மகள் கல்லூரி மாணவி ப்ரீத்தி கூறியுள்ளார் எனது தாயார் இறந்த பின்னர் நானும் என் சகோதரிகளும் சமையல் செய்வதற்கு மிகவும் சிரமப்படுகிறோம். வீட்டில் மூன்று மகள்கள் இருந்தும் சமையல் செய்ய கற்றுக் கொடுக்காமல் இருப்பதாக அண்டை வீட்டார்கள் எனது அம்மாவை கேலி செய்வார்கள். ஆனால் உண்மையில் அம்மா எங்களை அடுப்பங்கரை பக்கமே செல்ல அனுமதிக்கவில்லை என்று தன் தாயின் இழப்பு குறித்து ப்ரீத்தி கூறியது பெரும் சோகமாக இருந்தது

More News

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசி தந்தை கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை

பள்ளி மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி, சென்னையில் உள்ள பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின்

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் MMR தடுப்பூசி: கொரோனா சிகிச்சைக்கு கைக் கொடுக்குமா???

தட்டம்மை மற்றும் ரூபெல்லா போன்ற தொற்றுகளுக்கு எதிராக குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் MMR தடுப்பூசி தற்போது கொரோனா நோய்

சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதால் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முத்தக்காட்சிகளை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க கூடாது: வனிதா விஜயகுமார்

கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார் என்பதும், திருமணத்தின் போது மோதிரம் மாற்றிய பின்னர், இருவரும் லிப்கிஸ் அடித்த புகைப்படங்கள்

இளம் வயதிலேயே ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இடம் பிடித்த இந்தியர்!!!

ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இணைந்து பணியாற்ற இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார்.