திரையரங்குகளில் இனி ட்ரெய்லர் ரிலீஸ் கிடையாது: அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 17 2023]

திரையரங்குகளில் இனி ட்ரெய்லர் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் விஜய் நடித்த ’லியோ’ படத்தின் டிரைலர் வெளியான போது அந்த ட்ரெய்லர் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

ஆனால் ஒரு சில திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் திரையரங்கில் இருக்கைகளை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் அளித்த பேட்டியில் ’இனி திரையரங்குகளில் படத்தின் டிரைலர்களை வெளியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

திரையரங்குகளில் டிரைலர் வெளியிடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என்றும், அதனால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுகிறது என்றும், பாதுகாப்பு பிரச்சனையும் ஏற்படுவதால் இனிமேல் திரையரங்குகளில் டிரைலர் வெளியிடப் போவதில்லை என முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.