சென்னை மினி பாகிஸ்தானாக மாறுகிறதா??? வைரலாகும் பகீர் புகைப்படம்!!!

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

சென்னை மினி பாகிஸ்தானாக மாறிவருகிறது என்ற தகவலுடன் கடந்த சில தினங்களாக ஒரு புகைப்படம் டிவிட்டரில் அதிகம் வைரலாகி வருகிறது. வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது காவல் துணை ஆய்வாளர் அகிலன் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அகிலன் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கைகளை எடுத்தபோது முஸ்லீம் இளைஞர்கள் அவரைத் தாக்கியதாகவும் அந்தப் புகைப்படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தில் ஒரு போலீஸ்காரரின் சட்டை முழுவதும் ரத்தக்கரையுடன் காட்சியளிக்கிறது. மேலும் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படம்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவரைத் தாக்கியது 3 முஸ்லீம் இளைஞர்கள் என்ற தகவலும் காட்டத்துடன் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்தப் புகைப்படத்தை குறித்து விசாரித்த அதிகாரிகள் கடந்த 2017 இல் எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்றும் மேலும் அதில் இருப்பது ஒரு கான்ஸ்டபிள் என்றும் தெளிவுப் படுத்தியுள்ளனர்.

மேலும் அவரை தாக்கியது 3 முஸ்லீம் இளைஞர்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் அமர்ந்திருந்த இளைஞர்களை இவர் அப்புறப்படுத்த முயன்றபோது அங்கிருந்த இந்து இளைஞர்கள்தான் கான்ஸ்டபிளைத் தாக்கினார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் மதவிரோதப் போக்கை வளர்க்காதீர்கள் என்ற அறிவுரையும் மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.