டி.ஆர். ஒரு ஆன்மீகவாதியா? 'விழித்திரு' பிரச்சனை குறித்து மனம் திறந்த தன்ஷிகா
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்ஷிகா நடித்த 'விழித்திரு' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசியபோது டி.ராஜேந்தர் பெயரை விட்டுவிட்டதற்காக அதே மேடையிலேயே டி.ஆர்.ஆவேசமாக தன்ஷிகாவை சொற்களால் தாக்கினார். தன்ஷிகா மன்னிப்பு கேட்பதாக கூறியும் தொடர்ந்து டிஆர். தாக்கி பேசிக்கொண்டே இருந்ததால் படக்குழுவினர்களே அதிருப்தி அடைந்தனர். அதுமட்டுமின்றி டி.ராஜேந்தருக்கு விஷால் உள்பட திரையுலகமே கண்டனம் தெரிவித்தது.
ஆனால் தன்ஷிகா இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இதுகுறித்த கேள்விகளையும் அவர் பத்திரிகையாளர்களிடம் இருந்து தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த 'விழித்திரு' திறனாய்வுக் கூட்டத்தில் தன்ஷிகா இதுகுறித்து மனம் திறந்தார். அவர் பேசியதாவது, "டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் என பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்த சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகின. டி.ஆர். சார், நான் ஒரு ஆன்மிகவாதி எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேசமாட்டார்.
எனக்கு அதிகமாகக் கோபம் வரும். அதனைக் கட்டுப்படுத்த நான் தியானம் செய்கிறேன். அதனால்தான் இப்போது அமைதியாக இருக்கிறேன். எப்போது நான் ஆன்மிக பாதையில் செல்லத் தொடங்கினேனோ, அப்போது முதல் சாந்தமாகிவிட்டேன். அதன் காரணமாகவே, அன்று அந்த சம்பவத்தின்போது நான் அமைதியாக இருந்தேன்.
அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பெண்கள் இந்த சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேர்கிறது.
அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் குறைகூறவில்லை. மீரா கதிரவன் போன்ற இயக்குநர்களால்தான் நான் இன்று சினிமாத் துறையில் நடிகையாக இருக்கிறேன். டி.ஆர். பிரச்சினையை இத்துடன் முடிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments