எத்தனை கோடி செலவு செய்தாலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடியாது: கே.எஸ்.ரவிகுமார்

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் எடுக்க முடியாது என அவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கேஎஸ் ரவிக்குமார், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது தன்னிடம் ரசிகர்கள் எப்போது பார்த்தாலும் ’தசாவதாரம்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது? என்று கேட்கிறார்கள்

எனக்கும் சரி கமல்ஹாசனுக்கும் சரி எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் ’தசாவதாரம்’ போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே ’தசாவதாரம் 2’ உருவாக வாய்ப்பில்லை என்பதை கூறிக் கொள்கிறேன் என்று கூறினார்

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘தசவாதாரம்’ திரைப்படம் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில் அந்த படம் உலகம் முழுவதும் ரூ.220 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’தசாவதாரம் 2’ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு கே.எஸ்.ரவிகுமாரின் இந்த அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.