ரெண்டாவது சான்ஸ் யாருக்கும் கிடையாது! ஓவியாவின் அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றை எபிசோடில் ஓவியா-ஆரவ் காதல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஓவியாவின் பெயரை டேமேஜ் ஆக்க, அவரை பைத்தியக்காரி மாதிரி காண்பிக்கப்பட்ட நிலையில் நேற்று முழுவதும் ஓவியா கிட்டத்தட்ட தெளிவாக இருந்தார்.
ஆரவ் மீது வெறித்தனமான காதல் கொண்டிருந்த நிலையில் ஆரவ் தன்னை விட்டு ஒதுங்கி ஒதுங்கி செல்வதால் நேற்று இரண்டில் ஒன்று என்ற முடிவை கேட்டு பெற்றுவிட்டார். ஆரவ், ஓவியா முன் அவ்வளவு உறுதியாக ஓவியாவை தான் காதலிக்கவில்லை, நட்பாக மட்டுமே பழகியதாக கூறியதும், முதலில் உடைந்து அழுதாலும் பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு 'இனி உன்னுடன் நட்பாக கூட பழகப்போவதில்லை, நான் வாழ்க்கையில் யாருக்கும் ரெண்டாவது சான்ஸ் கொடுத்ததில்லை, உனக்கும் அது கிடையாது, இனிமேல் என் வாழ்க்கையிலேயே நீ கிடையாது' என்று கூறிவிட்டு கோபமாக சென்றுவிட்டார்.
உண்மையில் ஆரவ் ஒரு நல்ல வாழ்க்கையை இழந்துவிட்டார் என்றே கூறப்படுகிறது. ஒருவேளை வெளியே ஓவியாவுக்கு இருக்கும் செல்வாக்கு தெரிந்திருந்தால் அவரது முடிவு வேறு மாதிரியாக கூட இருந்திருக்கும். இப்படி உண்மையாக இருக்கும் ஒரு பெண் நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று ஒவ்வொரு இளைஞனும் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் கையில் கிடைத்ததை நழுவ விட்ட ஆரவ், பின்னால் ரொம்ப வருத்தப்படுவார் என்றே தோன்றுகிறது. மேலும் இது அவராக எடுத்த முடிவாக இருந்தால் கூட ஜீரணித்து கொள்ளலாம். அந்த வீட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் குள்ளநரிகளின் பேச்சை கேட்டு இந்த முடிவை அவர் எடுத்திருந்தால் அவரது இழப்பு இன்னும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் ஜெயம் ரவி கூறுவாரே, 'இந்த வீடு ஒரு நல்ல பெண்ணை இழந்துவிட்டது' என்று. அதே நிலைதான் தற்போது ஆரவ்வுக்கு.
மேலும் ஓவியா வாழ்க்கையில் ஏற்கனவே சந்தித்திருந்த சோதனைகளை மிக எளிதாக கடந்து வந்துள்ளார். அதேபோல் இதையும் கடந்து அவர் பழைய பன்னீர்செல்வமாக மீண்டு வருவார் என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments