சமந்தாவுக்காக மாற்றம் செய்யப்பட்டதா? 96 தெலுங்கு ரீமேக் குறித்து இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான '96' தற்போது தெலுங்கில் உருவாகவுள்ளது. ராம், ஜானு கேரக்டர்களில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர் என்று வெளியான அதிகாரபூர்வ செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தாவுக்காக பள்ளிகால காதல் காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக கல்லூரி கால காதல் காட்சிகள் இடம்பெறவிருப்பதாகவும், அதனால் படம் முழுவதும் சமந்தாவே ஜானு கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வலம் வந்தன. ஆனால் இந்த தகவலை இயக்குனர் பிரேம்குமார் மறுத்துள்ளார்.
96 தெலுங்கு ரீமேக்கிலும் பள்ளிக்காதல் காட்சிகள் உண்டு என்றும், சமந்தாவுக்காக கதையை மாற்றியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் பள்ளிகால காதல் காட்சிகளில் சர்வானந்த் கேரக்டரில் நடிக்க நடிகர் தேவை என்ற விளம்பரமும் படக்குழுவினர் சார்பில் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயது ஜானு கேரக்டரில் தமிழில் நடித்த கவுரி கிஷன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments