சமந்தாவுக்காக மாற்றம் செய்யப்பட்டதா? 96 தெலுங்கு ரீமேக் குறித்து இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,January 29 2019]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான '96' தற்போது தெலுங்கில் உருவாகவுள்ளது. ராம், ஜானு கேரக்டர்களில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர் என்று வெளியான அதிகாரபூர்வ செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தாவுக்காக பள்ளிகால காதல் காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக கல்லூரி கால காதல் காட்சிகள் இடம்பெறவிருப்பதாகவும், அதனால் படம் முழுவதும் சமந்தாவே ஜானு கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வலம் வந்தன. ஆனால் இந்த தகவலை இயக்குனர் பிரேம்குமார் மறுத்துள்ளார்.

96 தெலுங்கு ரீமேக்கிலும் பள்ளிக்காதல் காட்சிகள் உண்டு என்றும், சமந்தாவுக்காக கதையை மாற்றியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் பள்ளிகால காதல் காட்சிகளில் சர்வானந்த் கேரக்டரில் நடிக்க நடிகர் தேவை என்ற விளம்பரமும் படக்குழுவினர் சார்பில் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயது ஜானு கேரக்டரில் தமிழில் நடித்த கவுரி கி‌ஷன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

8 மாதங்களில் ரூ.1000 கோடி பிசினஸ்: சூப்பர் ஸ்டாரின் வசூல் வேட்டை

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் இருந்து வரும் ரஜினிகாந்த், இந்த வயதிலும் மெகா ஸ்டார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வெற்றிப்படங்களில்

தளபதி 63: ரிஸ்க்கான சண்டைக்காட்சி படப்பிடிப்பில் விஜய்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

'பேட்ட', 'விஸ்வாசம்' புயலிலும் சாதனை செய்யும் 'சர்கார்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்து, உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது.

தமிழ்ப்படத்திற்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அமிதாப்பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், அந்த படத்திற்கு 'உயர்ந்த மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது

'தேவ்' சென்சார் தகவல் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்த நிலையில்