கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: அதிபர் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பள்ளிகள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடதக்கது. பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று கூற முடியாத நிலையில் தான் உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டி என்பவர் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸை ஒழிப்பதற்குள் பள்ளிகள் திறக்கப்பட்டு குழந்தைகளை தனிமனித இடைவெளியுடன் உட்காரவைத்து வகுப்பு நடத்த நான் அனுமதிக்க மாட்டேன் என்றும், குழந்தைகள் தனித்தனியாக உட்கார்ந்தால் அவர்களுக்குள் வெறுப்பு தான் அதிகரிக்கும் என்றும் எனவே கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிகள் திறக்கப்படாது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்த பின் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் தனது அரசு உறுதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் எடுத்த இந்த முடிவை மேலும் சில நாட்டு அதிபர்கள் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout