'மெர்சலில் எந்த காட்சியும் நீக்கம் இல்லை: ஹேமாருக்மணி
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவில் டிரெண்டை ஏற்படுத்தியது என்பதும், எதனால் இந்த டிரெண்ட் உருவானது என்பதும் அனைவரும் அறிந்ததே
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தில் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு தயாராக இருப்பதாகவும், வரும் திங்கள் முதல் அந்த காட்சிகள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது
ஆனால் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ ஹேமா ருக்மணி அவர்கள் சற்றுமுன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 'மெர்சல்' படத்தின் எந்தவொரு காட்சியும் நீக்கப்படவோ, வசனங்கள் மியூட் செய்யவோ இல்லை என்றும், தளபதி ரசிகர்கள் முழு படத்தையும் திருப்தியாக ரசிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த படத்தின் உயிர்நாடியே கடைசி காட்சியில் இருக்கும் அந்த வசனங்கள் தான். அந்த வசனங்களை நீக்கினால் ரசிகர்கள் அதிருப்தி அடைய நேரிடும் என்பதால் எந்த காட்சியும் நீக்கப்படவில்லை என்ற முடிவை தயாரிப்பு தரப்பினர் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments