'2.0' ரிலீஸ் தள்ளிப் போகின்றதா? படக்குழுவினர் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடித்த '2.0' திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் இரவுபகலாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அக்சயகுமார் நடித்த பாலிவுட் திரைப்படமான 'பத்மன்' என்ற திரைப்படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் '2.0' ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போகும் என்றும் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த 'காலா' மேலும் தள்ளிப்போகும் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது, 'அக்சயகுமாரின் 'பத்மன்' ஜனவரி 25ல் வெளியாகும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்தது உண்மைதான் என்று கூறியதோடு இதுகுறித்து அக்சயகுமாரிடம் பேசியுள்ளதாகவும், '2.0' ஜனவரி 25ல் வெளியாவது உறுதியெனில் 'பத்மன்' ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறினர்
மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி சோனி நிறுவனத்தின் 3D திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதால் அதே தேதியில் 3D படமான '2.0' வெளிவந்தால் 3D திரையரங்குகள் பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதனால் '2.0' திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளிவருவது உறுதி என்றும், ஏப்ரல் 14ல் வெளிவரும் என்ற செய்திகளில் உண்மையில்லை என்றும் தெரிவித்தனர்.
எனவே ரஜினி ரசிகர்கள் வரும் ஜனவரி 25ஆம் தேதி இந்த படத்தை ரசிக்க தயாராக இருக்கலாம் என்பதே இப்போதைய நிலை ஆகும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments