திரையரங்குகளுக்கு தளர்வுகள் எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு தொழில் முடங்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டாலும் அத்தியாவசிய தேவை உள்ள பொருட்கள் மட்டுமே விற்பனையாகி வருவதாகவும் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை படு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கபடவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையின்றி வருமானம் இன்றி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களிடம் திரையரங்க உரிமையாளர்கள், அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து கூடிய விரைவில் முடிவு சொல்வதாக அமைச்சர் தெரிவித்திருந்தார் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகளில் திறக்க வாய்ப்பு இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரங்களில் நேற்று செய்திகள் வெளியானது. ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’தமிழகத்தில் திரையரங்குகள், வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் ஆகியவற்றுக்கு தற்போது எந்த தளர்வுகளும் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி உள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களுக்கு சினிமா ரசிகர்களுக்கு ஓடிடி மட்டுமே கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Baby Nayanthara's plus 2 marks are out!

The teenager has secured A + in all subjects in the Plus Two examination with 94.2% marks.

Priest who raped 16-year-old girl wishes to marry her

An ex-catholic priest, identified as Vadakkancheril Mathew alias Robin Vadakkancheril, who was convinced of raping a minor girl in 2016,

Chris Evans to send Captain America shield to kid who saved sister from dog!

Famous Hollywood actor Chris Evans, well known for playing the Marvel superhero Captain America has released a new video message, appreciation the kid who was hailed a

Those rumours on 'RRR', Pawan Kalyan-Krish's movie are false: Writer

It's known that ‘Khaidi No. 150’ and ‘Gauthamiputra Satakarni’ writer Sai Madhav Burra is currently working on SS Rajamouli's

Nikki Galrani and Aadhi in love?

Nikki Galrani is fondly known as 'Darling' after her Tamil debut movie has featured in a number of hit films in all South Indian languages.  She is currently playing the lead in 'Rajavamsa