No questions: பல கேள்விகளுக்கு சீனா தரப்பில் பதில் ஏதும் இல்லை!!! தொடரும் மர்மம்!!!

  • IndiaGlitz, [Friday,June 19 2020]

 

கல்வான் தாக்குதல் தொடர்பாக சீன வெளியுறவுத் துறையிடம் தொடர்ந்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய நிறுவனம் (ஏஎஸ்பிஐ) வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கல்வான் பகுதியில் இருநாட்டு இராணுவங்களும் படைகளை விலக்கிக் கொள்ளாமல் முன்னோக்கி செல்வதைப்போல நிற்கிறார்கள் என அதிர்ச்சித் தரும் வகையில் ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதைத்தவிர கல்வான் பகுதியில் சீனா சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டு வருவதையும் அந்தச் செயற்கைக்கோள் படம் உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் தெளிவான விளக்கம் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.

மேலும், சீனா கிழக்கு லாடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் பெரிய அளவிலான ராணுவ வீரர்களையும் கட்டுமானச் சாதனங்களையும் இறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தற்போது அந்தப் பகுதியில் அணைக்கட்டும் பணியைத் தொடங்கி இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்ப படுகிறது. இதுதொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டபோது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஸாவோ லிஜியன் பதில் எதுவும் அளிக்க மறுத்து இருக்கிறார். மேலும் சீனா தரப்பில் உயிரிழந்த வீரர்கள் பற்றிய தகவலையும் அவர் இதுவரை வெளியிட வில்லை.

சீனா கல்வான் பகுதியில் அணைக்கட்டும் பணியில் இறங்கியிருக்கலாம் என்ற தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு செயற்கைக்கோள் படமும் வெளியாகி இருக்கிறது. ஹாக் ஐ360 என்ற அந்த செய்றகைக்கோள் புகைப்படம் கல்வான் மலைப் பகுதியை ஒட்டி பல லாரிகளில் கட்டுமான பொருட்கள் எற்றிச் செல்வதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அந்தப் பகுதியில் ராணுவப் படைகளுக்கான பிஎல்ஏ இராணுவ முகாமும் அமைக்கப்பட்டு இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இத்தனை பலமான பாதுகாப்புகளுடன் அங்கு என்ன நடக்கிறது என சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடன் கேள்வி எழுப்பப் பட்டபோது அவர் அந்தக்கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து விட்டதாகவும் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அதைப்போல கல்வான் பகுதியில் சீனாவின் கட்டுமான பணிகளை இந்திய வீரர்கள் இடிக்கச் சென்றபோதுதான் சீன வீரர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கும் லிஜியன் எந்தப் பதிலையும் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனால் சீனா கல்வான் பகுதியில் அணைக்கட்டுகளை அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாகச் சந்தேகம் எழுப்பப் பட்டு வருகிறது. முன்னதாக சீனாவின் தத்துவஞானி சுன் ட்சூ சீனாவின் இராணுவ உக்தி தண்ணீருக்கானது எனச் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும் சீனா கடந்த பல ஆண்டுகளாகவே எல்லையில் தண்ணீருக்கான கட்டுமானங்களில் கவனம் செலுத்து வருகிறது என்றும் தற்போது சீனாவின் கவனம் கல்வான் பகுதிக்கு வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி செய்த ரஜினி ரசிகர்கள்

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதித்த சிறுவனின் குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

சுஷாந்துக்காக கதறிய தமிழ் நடிகை! வைரலாகும் வீடியோ

அஜித் நடித்த 'வில்லன்', விக்ரம் நடித்த 'ஜெமினி' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கிரண், சுஷாந்துக்காக கதறி அழுத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

கல்வான் தாக்குதல் 4 ஆவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை!!! தற்போதைய நிலவரம் என்ன???

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6 தேதிகளில் தொடங்கிய பதற்றம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நடிகர் செந்தில்

இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த இந்திய, சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

எங்கிருந்தாலும் வாழ்க: 60களில் கொடிகட்ட பறந்த பழம்பெரும் பாடகர் மறைவு

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரும், கடந்த 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல காலத்தால் அழியாத பாடல்களைப்