கல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கு எந்த திட்டமும் இல்லை - நிர்மலா சீதாராமன்

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதில் அளித்துள்ளார்.

''பொதுத்துறை வங்கிகள் அளித்த புள்ளிவிவரங்களின் படி கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதல் 2019, மார்ச் மாதம் வரை மாணவர்கள் வங்கியில் பெற்ற கல்விக் கடன் நிலுவை ரூ.67 ஆயிரத்து 685.59 கோடியாக இருந்தது. இது 2019, செப்டம்பர் மாதம் வரை ரூ.75 ஆயிரத்து 450.68 கோடியாக அதிகரித்துள்ளது.

கல்விக் கடனை விரைவாகச் செலுத்தக் கூறி மாணவர்களுக்கு வங்கிகள் தரப்பில் எந்த விதமான நெருக்கடியும் அளிக்கப்படவில்லை, அவ்வாறு வங்கிகள் நெருக்கடியால் மாணவர்கள் கல்விக் கடனைச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக எந்தவிதமான தகவலும் இல்லை. கல்விக் கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் மாணவர்களிடம் எந்தவிதமான கடுமையான நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை.

அதேபோல, மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்தவிதமான திட்டமும் அரசிடம் இல்லை. அதுகுறித்து மத்திய அரசு ஆலோசிக்கவும் இல்லை’’.இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

More News

தலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 168வது திரைப்படமான 'தலைவர் 168' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ 50 ரூபாயாக இருந்த வெங்காயம் விலை தற்போது 200 ரூபாய்க்கு மேல் பெற்று விற்பனையாகி வருகிறது. ஏழை, எளிய மக்கள் வெங்காயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு

மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்..!

விலை அதிகமாக உள்ளதால் சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான மணமகன்: பெரும் பரபரப்பு

தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டது ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

டெல்லி தீவிபத்து: உயிர் போகும் கடைசி நிமிடத்தில் நண்பனுக்கு போன் செய்த நபர்! 

டெல்லி தீ விபத்தில் சிக்கிய ஒரு நபர் உயிர் போகும் கடைசி நிமிடத்தில் 'என் குடும்பத்தைக் காப்பாற்று என உருக்கமாக போன் செய்து நண்பருக்கு சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.