அரசியல்வாதிகள் - நடிகர்கள் வரவேண்டாம்: மாணவர்கள் எதிர்ப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 05 2017]

கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தனர். இந்த போராட்டத்தின் இறுதியில் ஒருசில வன்முறை சம்பவங்கள் நடந்தாலும் போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெற்றது. இருப்பினும் நடிகர்கள், அரசியல்வாதிகளால் சில சர்ச்சைகளும் எழுந்தன.

இந்த நிலையில் அனிதா பற்ற வைத்த நீட் என்னும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திலும் சில நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆதரவு கொடுத்து கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ள நிலையில் அரசியல்வாதிகள், நடிகர்கள் கலந்துகொள்ள மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டம் முழுக்க முழுக்க அனிதாவின் உயிர்த்தியாகத்தை ஒட்டி ஆரம்பித்துள்ளதாகவும், நீட் தேர்வை நீக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், இந்த போராட்டத்தில் எந்த ஒரு நடிகரும் அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

More News

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ஆண்களுக்கு மட்டுமே!

ஜோதிகா நடித்து முடித்துள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஓவியாவின் டுவிட்டை வைத்து ஆரவ்வை கலாய்த்த நடிகர்

ஓவியா நேற்று பதிவு செய்த ஒற்றை வரி டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி வளர்மதி கடந்த மாதம் கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...

சினேகன் தந்திரக்காரர் மட்டுமே! தைரியசாலி இல்லை: காஜல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய காஜல், வெளியே வந்த பின்னர் அளித்த பேட்டியில் சினேகன் குறித்துதான் அதிகம் குறைகூறியுள்ளார்...

நான் ஏன் கெட்டவனாக மாறினேன்: ஜூலியிடம் சினேகன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 71வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று புதிய தலைவரும், எவிக்சன் நாமினேசனும் நடந்தது. புதிய தலைவராக வையாபுரி தேர்வு செய்யப்பட்டார்...