நீட் 2021 நுழைவுத்தேர்வு ரத்தா??? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் காரணமாகக் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இந்த ஆண்டுக்கான வகுப்புகளும் தற்போது ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (நீட்) மாற்றம் இருக்குமா? கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என மாணவர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து டிவிட்டர் மூலம் கருத்து கேட்கும் நடவடிக்கையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஈடுபட்டு வருகிறார். அந்த விவாதத்தின்போது மாணவர்கள் #EducationMinisterGoesLive எனும் ஹேஷ் டேக் மூலம் வரும் கல்வி ஆண்டில் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் விவாதத்திற்கு இடையே 2021 இல் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “நீட் 2021 தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை. கடந்த நீட் 2020 தேர்வு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டு பின்பு மீண்டும் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் அளித்தோம். எங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். ஆனால் அது மாணவர்கள் மற்றும் தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பாடத்திட்டம் குறைக்கப்படுவது குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுகுறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். பாடத்திட்ட குறைப்பின் அடிப்படையில் எத்தனை கேள்விகள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அலோசனை நடைபெற்று வருகிறது எனப் பதில் அளித்தார். இந்த உரையாடலை வைத்து பார்க்கும்போது கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு வரும் கல்வி ஆண்டில் நீட் தேர்வை ரத்து செய்யாது என்பது தெளிவாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout