நீட் 2021 நுழைவுத்தேர்வு ரத்தா??? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!!!

  • IndiaGlitz, [Thursday,December 10 2020]

 

கொரோனா பரவல் காரணமாகக் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இந்த ஆண்டுக்கான வகுப்புகளும் தற்போது ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (நீட்) மாற்றம் இருக்குமா? கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என மாணவர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து டிவிட்டர் மூலம் கருத்து கேட்கும் நடவடிக்கையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஈடுபட்டு வருகிறார். அந்த விவாதத்தின்போது மாணவர்கள் #EducationMinisterGoesLive எனும் ஹேஷ் டேக் மூலம் வரும் கல்வி ஆண்டில் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் விவாதத்திற்கு இடையே 2021 இல் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “நீட் 2021 தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை. கடந்த நீட் 2020 தேர்வு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டு பின்பு மீண்டும் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் அளித்தோம். எங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். ஆனால் அது மாணவர்கள் மற்றும் தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும் பாடத்திட்டம் குறைக்கப்படுவது குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுகுறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். பாடத்திட்ட குறைப்பின் அடிப்படையில் எத்தனை கேள்விகள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அலோசனை நடைபெற்று வருகிறது எனப் பதில் அளித்தார். இந்த உரையாடலை வைத்து பார்க்கும்போது கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு வரும் கல்வி ஆண்டில் நீட் தேர்வை ரத்து செய்யாது என்பது தெளிவாகிறது.

More News

ரொம்ப ஓவரா ஆடுற: பாலாஜி கன்னத்தில் அடித்த ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டு புரமோக்களும் காரசாரமாக இர&#

ஐசிசி ரேக்கிங் பட்டியலில் உச்சத்துக்கு சென்ற இந்திய விக்கெட் கீப்பர்!!!

T20 தரவரிசை பட்டியலில் முதல் 3 இடத்திற்குள் நுழைந்து இருக்கிறார் இந்திய விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான K.L.ராகுல்.

மதம் கடந்த மனிதம்… இந்து கோவிலுக்கு நிலத்தை நன்கொடையாகக் கொடுத்த இஸ்லாமியர்!!!

மதம் ஒருவேளை மனிதனைக் கட்டிப்போட்டாலும் மனிதம் எப்போதும் பரந்துபட்டதாகவே இருக்கும்

அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா??? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!!

பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.

கொரோனா பாதிப்பால் 9 மாத சிகிச்சை… மீண்டுவந்த இளம் பெண்ணின் நெகிழ்ச்சி அனுபவம்!!!

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் பல்வேறு சிக்கலான சிகிச்சைக்குப் பின் உடல் நலம்பெற்று நேற்று வீடு திரும்பியுள்ளார்.