சிறப்பு காட்சி பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கான டிக்கெட்டுக்கள் கடந்த இரண்டு நாட்களாக விற்பனையாகி வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல நகரங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படுவதால் இதன்மூலமே பல லட்சங்கள் வசூலாகியிருக்கும் என கூறப்படுகிறது
இந்த நிலையில் சிறப்புக்காட்சிகள் குறித்து சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் கூறியதாவது: தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுவதால் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. தீபாவளி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தினை திருப்பிக்கொடுக்க வலியுறுத்தி உள்ளோம். பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை' என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் அதிகாலை காட்சிக்கு டிக்கெட் எடுத்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout