மால்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து! இங்கல்ல...தெலுங்கானாவில்

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் பார்க்கிங் கட்டணம் என்ற கொள்ளையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் தெலுங்கானாவில் அதிரடியாக மால்களில் பார்க்கிங் கட்டணங்களை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானாவில் வரும் ஏப்ரல் முதல் பார்க்கிங் கட்டணங்களை வரையறைப்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் உள்ள மால்களில் முதல் அரை மணி நேரத்துக்கு எந்த வாகனத்துக்கும் கட்டணம் கிடையாது என்றும், அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை, வாகன உரிமையாளர் அந்த மாலில் ஏதேனும் பொருள் வாங்கியதற்கான பில்லை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக வாகனம் நிறுத்துபவர்கள், அந்த வாகன நிறுத்துக் கட்டணத்தை விட அதிக மதிப்பிற்கு பொருட்கள் வாங்கினாலும் கட்டணம் கிடையாது. இதில் திரையரங்க டிக்கெட் கட்டணமும் அடங்கும்.  தெலுங்கானா மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டண வரையரையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் பார்க்கிங் கட்டணங்களை தமிழக அரசு வரையறுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

More News

விஜய் படத்திற்கு சிறப்பு அனுமதி: கருத்து கூறிய சித்தார்த்

தமிழ் சினிமாவுலகம் இதுவரை கண்டிராத வகையில் புதிய படங்கள் வெளியீடு இல்லை, படப்பிடிப்பு இல்லை, போஸ்ட் புரடொக்சன்ஸ் இல்லை என ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

சூர்யா படத்தில் ப்ரியாவாரியர் நடிப்பது உண்மையா? கே.வி.ஆனந்த் விளக்கம்

சூர்யா நடித்து வரும் 'NGK' படத்தை அடுத்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தவர்கள் யார் யார்? சசிகலா வாக்குமுலம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மருத்துவமனையில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தபோது அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை

விஜய் 62 படப்பிடிப்பிற்கு அனுமதி ஏன்? தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்

கடந்த சிலநாட்களாக புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை, புதிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து என ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சினிமா உலகமே ஸ்தபித்து போய் உள்ளது.

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் விஷால்-ராஷிகண்ணா

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'டெம்பர்' தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்த இந்த படத்தை பூரிஜெகந்நாத் இயக்கியிருந்தார்