ஒரு டிக்கெட் கூட கவுண்டரில் இல்லை.. 4 நாட்களுக்கு ஹவுஸ்புல்.. விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கவுண்டரில் ஒரு டிக்கெட் கூட கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு சில நிமிடங்களில் நான்கு நாட்களுக்கு உரிய 'லியோ’ படத்தின் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான காசி தியேட்டரில் நேற்று இரவு 7 மணிக்கு ஆன்லைன் மூலம் ’லியோ’ படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. மேலும் மறுநாள் மதியம் 12 மணிக்கு கவுண்டரில் டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் 19, 20, 21, 22 என வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களுக்கும் உள்ள அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் விட்டுத் தீர்ந்தன.
இதனை அடுத்து மறுநாள் மதியம் 12 மணிக்கு தியேட்டரில் கவுண்டரில் டிக்கெட் வாங்கலாம் என ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் ஹவுஸ்புல் போர்டை பார்த்து அதிருப்தி அடைந்தனர்
சென்னையில் இப்போதைக்கு காசி திரையரங்கில் மட்டுமே தற்போது முன்பதிவு முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்து மற்ற திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியவுடன் அந்த திரையரங்குகளிலும் மிக வேகமாக டிக்கெட் விற்பனை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் 19, 20 ,21, 22 ஆகிய நான்கு நாட்கள் மட்டும் இன்றி 23 ,24 ஆகிய இரு தினங்களிலும் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் முதல் ஆறு நாட்களில் இந்த படம் மிகப்பெரிய வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments