இரும்பு பெண்மணியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: விஷால்

  • IndiaGlitz, [Wednesday,December 05 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு இதே டிசம்பர் 5ஆம் தேதிதான் காலமானார். அவருடைய இரண்டாவது நினைவு தினத்தை அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் இன்று அனுசரித்து வருகின்றனர்.

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை நோக்கி அமைதிப்பேரணி நடந்தது. அதேபோல் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையிலும் ஒரு அமைதிப்பேரணி நடந்தது

இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, 'இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும், நடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவது குறித்து, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

More News

பிரபல எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் சினிமாவின் பிரபல வசனகர்த்தாவும், பல நூல்கள் எழுதிய எழுத்தாளருமான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சற்றுமுன் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூட்டை தூக்கி கிடைத்த தொகையை கஜா பாதிப்பானவர்களுக்கு கொடுத்த விஷால்

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலின் பாதிப்பு கணக்கிட முடியாத அளவில் இருந்தாலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமானோர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.

நாளை 'விஸ்வாசம்' டீசரா? பிரபல திரையரங்கு உரிமையாளர் டுவீட்டால் பரபரப்பு

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை தகர்த்தது

ஃபோர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் நயன்தாரா!

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து வருகிறார்.

பிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல்' வெற்றி பெற்றதை தொடர்ந்து