இந்தியா தரப்பில் இனிமேல் ஒருவர் கூட சாகக்கூடாது!!! அதிரடி முடிவெடுத்த இந்திய இராணுவம்!!!

  • IndiaGlitz, [Friday,June 19 2020]

 

திங்கள் கிழமை (ஜுன் 15) இந்திய எல்லைப் பகுதியில் நடைபெற்ற சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி விட்டது. கடந்த 45 ஆண்டுகளாக எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருந்து ஒரே நேரத்தில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இனியொரு முறை இப்படி நடைபெறக் கூடாது என இந்திய இராணுவம் தற்போது அதிரடி காட்டி வருகிறது. கல்வான் தாக்குதல் நடைபெற்று 4 ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்திய இராணுவத்தின் சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பணியாற்றும் இராணுவ வீரர்கள் இனிமேல் உடல் முழுவதும் பொருந்தும் வகையில் நவீன கவசத்தை அணிந்து இருப்பார்கள். நவீன உடையானது ஆன்ட்ராய்ட் முறையில் பாலிகார்பனேட்டுகளை கொண்டு தயாரிக்கப் பட்டு இருக்கும். இனிமேல் இரும்பு கம்பி, ராடுகள், கற்கள் எதைக் கொண்டும் இந்திய இராணுவ வீரர்களைத் தாக்க முடியாது என அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. முழு உடலையும் மறைக்கும் வகையிலான கவச உடையை மும்பையைச் சார்ந்த ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

முதற்கட்டமாக 500 இராணுவவீரர்களுக்கு இந்த உடை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 1962 இல் நடைபெற்ற போருக்குப் பின்னால் இருநாட்டு இராணுவமும் துப்பாக்கிகளை பயன்படுத்தக் கூடாது என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி துப்பாக்கிகளை பயன்படுத்தா விட்டாலும் கற்கள், இரும்பு ராடுகள் போன்றவற்றை அவ்வபோது பயன்படுத்தி தாக்கிக் கொள்கின்றன. கடந்த மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளின்போது நடைபெற்ற கைகலப்பில் கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டதாகவும் செய்தி வெளியானது. அதையடுத்து கல்வான் தாக்குதலில் சீனா இராணுவம் ஆணிகள் பொருத்திய பெரிய கம்பிகளையும், இரும்பு ராடுகளையும் துணியால் மூடப்பட்டு இருந்த கற்களையும் பயன்படுத்தியதாகத் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுபோன்ற அசம்பாவிதங்களை இனி தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் நவீன உடைகள் தயாரிக்கப் படும் என இந்திய இராணுவம் உறுதி அளித்து இருக்கிறது. கடந்த மே 22 ஆம் தேதி பாங்காங் த்சோ பகுதியில் இந்திய இராணுவத்தினர் சீனாவின் எல்லைப் பகுதியில் அத்துமீறியதாக சீனா தனது இராணுவ துருப்புகளை எல்லைப் பகுதியில் குவித்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் தனது பாதுகாப்பை பலப்படுத்தியிது. இந்தப் பதற்றம் ஜுன் 15 ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் பெரிய அசம்பாவிதத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. கல்வான் பகுதியில் சீன இராணுவ வீரர்கள் கூடாரங்களை அமைத்து இருந்தனர் என்றும் அந்த இருப்பிடத்தை அகற்றுமாறு கர்னல் சந்தோஷ் பாபு தலைமையில் இந்திய வீரர்கள் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் இருநாட்டு வீரர்களும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதில் இந்திய வீரர்களும் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கின்றனர். தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் இதை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர். மேலும் சீனாவின் தரப்பில் உயிரிழப்பு நடந்திருப்பதை அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்டு உள்ளார். ஆனால் எவ்வளவு வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என்ற தகவலை அவர் தெரிவிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா தரப்பில் இதுவரை 20 வீரர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்த பட்டு இருக்கிறது. அதோடு இந்திய வீரர்கள் மாயமாகி இருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவின் சில உயர் அதிகாரிகள் அந்தத் தகவல் உண்மையானது அல்ல எனவும் தெளிவு படுத்தினர். ஆனால் நேற்று மாலை மேலும் 10 இந்திய இராணுவ வீரர்கள் சீனாவின் பிடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற தகவலை NDTV வெளியிட்டு இருக்கிறது. மேலும் 76 இந்திய இராணுவவீரர்களுக்கு காயம் ஏற்பட்டு பல மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

More News

No questions: பல கேள்விகளுக்கு சீனா தரப்பில் பதில் ஏதும் இல்லை!!! தொடரும் மர்மம்!!!

கல்வான் தாக்குதல் தொடர்பாக சீன வெளியுறவுத் துறையிடம் தொடர்ந்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி செய்த ரஜினி ரசிகர்கள்

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதித்த சிறுவனின் குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

சுஷாந்துக்காக கதறிய தமிழ் நடிகை! வைரலாகும் வீடியோ

அஜித் நடித்த 'வில்லன்', விக்ரம் நடித்த 'ஜெமினி' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கிரண், சுஷாந்துக்காக கதறி அழுத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

கல்வான் தாக்குதல் 4 ஆவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை!!! தற்போதைய நிலவரம் என்ன???

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6 தேதிகளில் தொடங்கிய பதற்றம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நடிகர் செந்தில்

இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த இந்திய, சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.