கொரோனா நேரத்தில் கைவிரித்த நர்சுகள்!!! திணறும் மாநில அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் மருத்துவ மனைகளில் வேலை பார்த்து வந்த 300க்கும் மேற்பட்ட நர்சுகள் வேலையை விட்டு விட்டு தங்களது சொந்த மநிலங்களுக்கு சென்று விட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் செவிலியர்களுக்கான நெருக்கடி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த செவிலியர்கள் கடந்த வாரத்தில் இருந்து தங்களது வேலையை ராஜினாமா செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக, வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் செவிலியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று மணிப்பூர் அரசு அறிக்கை வெளியிட்டதாகவும் அந்த அறிக்கையைத் தொடர்ந்தே செவிலியர்கள் ராஜினமா செய்வதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மருத்துவ மனைகளின் சங்கம் (AHEI) தலைமைச் செயலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த AHEI யின் தலைவர் என்ன காரணத்தினால் செவிலியர்கள் ராஜினாமா செய்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மட்டும் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை 169 செவிலியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மேலும் மணிப்பூர் 92, திரிபுரா 43, ஜார்க்கண்ட் 33 என்ற எண்ணிக்கையில் செவிலியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மணிப்பூர் முதலமைச்சர் நொங்தோம்பம் பிரேனசிங், வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் செவிலியர்கள் குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் எனக் கூறப்பட்டதே தவிர அவர்களை சொந்த ஊருக்கு திரும்பி வருமாறு யாரும் வலியுறுத்த வில்லை என்று கூறியுள்ளார். மேலும் அங்கு மருத்துவ மனை கட்டமைப்பு சரியில்லை, அந்தக் காரணங்களால் செவிலியர்கள் திரும்புகிறார்கள் எனவும் காணொலி காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நெருக்கடியான நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனா எண்ணிக்கை 2,575 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் உயிரிழப்பு 230 ஆக பதிவாகியிருக்கிறது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் சில செவிலியர்கள் தங்களது பெற்றோர் மற்றும் குழந்தைகளைப் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு திரும்பியதாகவும் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான செவிலியர்கள் ராஜினாமா செய்துள்ளது அம்மாநில அதிகாரிகளிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout