புதிய திரைப்படங்கள் வெளியாகாத வெள்ளிக்கிழமை.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,January 20 2024]

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது இரண்டு திரைப்படங்கள், அதிகப்படியாக ஐந்து திரைப்படங்கள் வரை ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். பொங்கல் விருந்தாக நான்கு பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியான நிலையில் நேற்றைய வெள்ளிக்கிழமையில் ஒரு புதிய படம் கூட வெளியாகவில்லை என்பது சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் விருந்தாக வெளியான சிவகார்த்திகேயனின் ’அயலான்’, தனுஷின் ’கேப்டன் மில்லர்’ அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் 1’ மற்றும் விஜய் சேதுபதியின் ’மெர்ரி கிறிதுஸ்மஸ்’ ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகின. இதில் ’அயலான்’, ’கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிக அளவில் தியேட்டர்களில் ரிலீசானது என்பதும் ’மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததை எடுத்து பல திரையரங்குகளில் இன்னும் இந்த படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்ற.

எனவே புதிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் தியேட்டர்கள் சரியான அளவில் கிடைக்காததால் நேற்றைய வெள்ளிக்கிழமையில் ஒரு புதிய தமிழ் படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் நேற்று தான் புதிய படம் கூட ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் அடுத்த வாரம் குடியரசு தின விருந்தாக ஆர்கே பாலாஜியின் ’சிங்கப்பூர் சலூன்’ அசோக் செல்வனின் ’ப்ளூ ஸ்டார்’ உள்பட 5 திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.