அக்டோபர் 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: விஷால் அதிரடி

  • IndiaGlitz, [Tuesday,October 03 2017]

மத்திய அரசு கடந்த ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசும் தற்போது கேளிக்கை வரியை உறுதி செய்துள்ளதால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர்  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவதுள்

தமிழ் திரைப்படத்துறையில் ஏற்கனவே பைரசி முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18%, 28% ஜிஎஸ்டி என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 27.09.2017 அன்று தமிழ்ப்படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம். இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களையும் மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்

இதுசம்பந்தமாக இன்று (03.10.2017) தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வருகிற வெள்ளிக்கிழமை (06.10.2017) முதல் புதிய தமிழ்த்திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ஸ்பைடர், கருப்பன் படங்களின் தமிழக வசூல் விபரங்கள்

கடந்த வாரம் வெளியான மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' மற்றும் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைப்படங்களின் சென்னை வசூல் குறித்த விபரங்களை நேற்று பார்த்தோம்.

விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம்: மக்களுக்கு சினேகன் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக கவிஞர் சினேகன் தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆரவ் எப்படி வெற்றி பெற்றார் என்பது புரியாத புதிராக உள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது: ஆனால் என்ன பிரயோசனம்?

விஜய்மல்லையா இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி கட்டாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச்சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

நடிகர் சங்கம் 64-வது பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் குறித்த தேதி மற்றும் பிற விபரங்களுடன் கூடிய அறிக்கை ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 நாள் திருவிழா ஒருவழியாக முடிந்துவிட்டது. ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படையினர்களின் எதிர்ப்பையும் மீறி ஆரவ் வெற்றி பெற்றுவிட்டார்.