அக்டோபர் 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: விஷால் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு கடந்த ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசும் தற்போது கேளிக்கை வரியை உறுதி செய்துள்ளதால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவதுள்
தமிழ் திரைப்படத்துறையில் ஏற்கனவே பைரசி முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18%, 28% ஜிஎஸ்டி என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 27.09.2017 அன்று தமிழ்ப்படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம். இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களையும் மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்
இதுசம்பந்தமாக இன்று (03.10.2017) தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வருகிற வெள்ளிக்கிழமை (06.10.2017) முதல் புதிய தமிழ்த்திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout