மொழி தெரியாமல் விழிபிதுங்க தேவையில்லை… இனி இந்த அறிவிப்பும் தமிழில் இருக்கும்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
விமானம் நிலையங்களில் பெரும்பாலும் அறிவிப்புகள் ஆங்கில மொழியிலே இருக்கும். இதனால் மற்ற மொழியறிவு குறைவாக இருக்கும் பயணிகள் சில நேரங்களில் கடுமையான சிரமத்தை அனுபவிக்க வேண்டி வந்தது. சென்னையில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு பறக்கும் ஒரு சில விமானங்களில் அறிவிப்புகள் தமிழ் மொழியிலும் செய்யப்படுகின்றன. ஆனாலும் இந்த நடைமுறை இந்தியாவிற்குள் பயணிக்கும் விமானங்களில் இல்லாதது ஒரு பெரும் குறையாகவே எண்ணப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிற்குள் பயணிக்கும் விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப் பட்டு இருந்தது.
இந்த விவகாரம் குறித்து தற்போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சென்னை வந்து செல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப் பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு கடிதம் மூலம் தகவல் அளித்து இருக்கிறார். அந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதனால் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் விமானத்தில் முதல் முறையாக பிரியா விக்னேஷ் என்பவர் தமிழில் அறிவிப்பு செய்ததாக இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. தமிழ் தெரிந்த 90 விழுக்காட்டு மக்கள் பயணம் செய்வதால் தமிழில் அறிவிப்பு செய்வதே சிறந்தது எனப் பலரும் இப்புதிய நடைமுறை குறித்த மகிழ்ச்சித் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக உள்நாட்டிற்குள் தமிழில் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments