திமுக வேணாம் போடா...! நடிகை கவுதமி காரசார ட்வீட்...!
- IndiaGlitz, [Saturday,April 03 2021]
பெண்களை இழிவுபடுத்தும் திமுகவினருக்கு அரசியலில் இடமில்லை என்று நடிகை கவுதமி காரசாரமாக பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து திமுக-வின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பேசியிருந்தது கடும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இதன் விளைவாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. மகளிர் மத்தியில் திமுகவிற்கு நெகட்டிவ் கருத்துக்கள் தொடர்ந்து வந்தது. கடும் எதிர்ப்புகள் கிளம்பிய பின் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். பின் தேர்தல் ஆணையம் அவரை தொடர்ந்து 48 மணிநேரத்திற்கு பிரச்சாரத்திற்கு செல்லக்கூடாது என தடை விதித்திருந்தது.
இந்நிலையில் பாஜக-பிரமுகர் மற்றும் நடிகையுமான கவுதமி ராசாவுக்கு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கட்சி பற்றி காரசாரமாகவும் விமர்சித்துள்ளார்.
அவர் பதிவிட்டிருப்பதாவது, நம் வீடுகளில் பொக்கிஷங்களாக மதிக்கப்படும் தாய்மார்களையும், சகோதரிகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசிவரும் திமுக தலைவர்களால் எப்படி அனைவருக்கும் பாதுகாப்பான நியாயமான நல்லாட்சியை வழங்க முடியும்? எந்தவிதமான சமூக பாதுகாப்பு உறுதியைக் கொடுத்துவிட முடியும்?
பெண்களை இழிவுபடுத்துவோர்க்கு அரசியலில் ஒருபோதும் இடம் கிடையாது என்பதை தாய்மார்கள், அக்கா, தங்கைகள், பெண்கள் ஆகியோர்களை மதிக்கும் ஒவ்வொருவரும் நிரூபித்து காண்பிப்பர். இப்படிப்பட்டவர்களை பொறுப்பான பதவிகளுக்கு வரவிடாமல் தடுப்பது நம் சமூக கடமையும் கூட என்று பதிவிட்டுள்ளார். கவுதமியின் இப்பதிவுக்கு இணையவாசிகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனுடன் திமுக வேணாம் போடா! என்ற ஹேஷ்டேக்-யும் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அண்ணன் @EPSTamilNadu , தங்களின் காலம் சென்ற தாயார் தவசாயி அம்மாள் அவர்களை, திமுகவின் மூத்த தலைவர் இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. தரக்குறைவான புண்படுத்தும் அவரின் பேச்சு அதிர்ச்சியையும் கோபத்தையும் அளிக்கிறது. (1/5)
— Gautami Tadimalla (@gautamitads) March 30, 2021