இனி இ-பதிவு தேவையில்லை...! தளர்வுகள் வெளியானது...!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்களப்பணியாளர்களுக்கு இ-பதிவு முறை அவசியமில்லை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு மே-10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்தநிலையில் மே-17-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு வெளியே செல்ல, இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு, மாவட்டங்களுக்குள்ளும், வெளியேயும் பயணிக்க இ-பதிவில் அப்ளை செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. தற்சமயம் இ-பதிவில் குறிப்பிட்ட தளர்வுளை அறிவித்துள்ளனர் சென்னை காவல் துறையினர்.
முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், சுகாதார துறையினர், ஊடகத்துறையினர் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும்போது, அவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என காவல் துறையினர் கூறியுள்ளனர். இவர்களைப்போல அரசு ஊழியர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பணி காரணமாக வெளியில் செல்லும் போது, தங்களது அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது என பெருநகர் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலே குறிப்பிட்டவர்களுக்கு பயண வழியில் அனுமதி மறுக்கப்பட்டாலோ, வாகனங்கள் அபகரிக்கப்பட்டாலோ
அவர்கள் சென்னை பெருநகர மக்கள் தொடர்பு உதவி ஆணையாளர் தொலைப்பேசி எண் 23452320 மற்றும் 9498130011 உள்ளிட்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் மற்றும் ஆம்புலன்சில் செல்பவர்களுக்கு தனியாக வழி ஏற்பாடு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்காதவர்கள் என 3000-த்திற்கும் அதிகமான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments