ஒரு கட் இல்லை, ஒரு மியூட் இல்லை.. க்ளீன் 'யூ' சான்றிதழ்.. பா ரஞ்சித்தின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,February 09 2024]

பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட செய்யாமல் ஒரு வசனத்தை கூட மியூட் செய்யாமல் கிளீன் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படம் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுரேஷ் மாரி என்பவரது இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஜே பேபி’. இந்த படத்தின் டீசர் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக பா ரஞ்சித் பெருமையுடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வீட்டில் நடக்கும் எமோஷனல் காட்சிகளுடன் கூடிய கதை அம்சம் கொண்டது இந்த படம் என்றும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

தினேஷ் மற்றும் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மாறன், கவிதா பாரதி, ஜெயா மூர்த்தி, சினேகன் நாராயணன், ஏழுமலை, தக்சா உள்பட பலர் நடித்துள்ளனர்.