இனிமேல் கியூப் கட்டணம் இல்லை: பாரதிராஜாவின் முக்கிய அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு தனி அதிகாரியை நியமனம் செய்ததும், தனி அதிகாரிக்கு ஆலோசனை வழங்க பாரதிராஜா உள்பட ஏழு பேர்களை ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ததும் தெரிந்ததே
இந்த நிலையில் பாரதிராஜா உள்பட ஏழு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு கடந்த 23.06.2019 அன்று கியூப் நிறுவனத்துடன் நடத்திய பேசுவார்த்தையின் அடிப்படையில்
1. நாளை (29.06.2019) முதல் தயாரிப்பாளர்கள் திரையிடும் பிரிவியூ காட்சி மற்றும் சென்சார் காட்சிக்கு முதல் மூன்று காட்சிக்கு கியூப் கட்டணம் இல்லை. மேலும் காட்சி தேவைப்படும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஹார்ட் டிஸ்க்கை கியூபில் கொடுத்து தங்களது திரைப்படத்தின் டிசிபிஐ காப்பி செய்து லைஃப் டைம் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
2. ஜூலை 12 முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் ஒரு நிமிட டிரைலர்களுக்கு கட்டணம் இல்லை
3. தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களுக்கான லைஃப் டைம் கியூப்புக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் ஷிப்டிங் வசதி உண்டு என்று கியூப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com