இனிமேல் பணம் இல்லை. ஒருவருடத்திற்கு எந்தத் திட்டத்திற்கும் தொகை ஒதுக்க முடியாது: கைவிரித்த நிதிஅமைச்சகம்!!!

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

 

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மத்தியஅரசு அதிக நிதியை ஒதுக்கிப் பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டது. இதனால் தற்போது நிதி நெருக்கடி நிலைமை ஏற்பட்டு உள்ளது என்றும் மேற்கொண்டு ஒருவருடத்திற்கு எந்த புதிய திட்டத்திற்கும் நிதியை ஒதுக்க முடியாது என்றும் மத்திய நிதிஅமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 31 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு தற்போதும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஜுன் மாதம் வரை நீடிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு தொழில்கள் தொடங்கப் பட்டு வருகின்றன.

களையிழந்த பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி நிதி ஒதுக்கி தொழில்துறையை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்று சிறப்பு பொருளாதாரத் திட்டமும் கொண்டுவரப் பட்டு இருக்கிறது. பிரதமர் அறிவித்த கார்ப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆர்ம நிர்பர் பாரத் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்தத் திட்டங்களுக்கு மட்டுமே இனி நிதி அமைச்சகம் தேவையான தொகையை ஒதுக்கும் எனவும் புதிய திட்டங்களுக்கு இனி அடுத்த நிதியாண்டு வரை ஒதுக்கப்பட மாட்டாது எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

கொரோனா நேரத்தில் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு தேவையான செலவினங்களை கவனிக்க வேண்டிய அவசியமும் நிதி அமைச்சகத்திற்கு இருக்கிறது. எனவே புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு எந்த மாநில அரசுகளும் நிதி அமைச்சகத்தை நாட வேண்டாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டதால் உள்ளூர் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கான சுகாதார கட்டமைப்பு நகரக் கட்டமைப்பு போன்ற செயல்பாடுகள் தடை பட்டு இருக்கின்றன. இனி அடுத்தாண்டு வரை வேறு எந்த புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படாது என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பதால் அவசர கால தேவைகளுக்கு என்ன செய்வது என்ற கவலையும் மாநில அரசுகளுக்கு உருவாகி இருக்கிறது.

More News

தமிழகம் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்: 1500ஐ நெருங்கியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கொரோனாவின் பாதிப்பு 1500ஐ நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியை அடிக்கும் காட்சியா? படத்தில் இருந்து வெளியேறிய பிரபல ஹீரோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியை அடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த படத்தில் இருந்து விலகியதாக பிரபல ஹீரோ ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமில் 1100 ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு!!!

இந்தியா பழங்காலத்தில் இருந்தே பல தென் கிழக்கு ஆசிய நாடுகளோடு உறுதியான தொடர்பை கொண்டிருந்தது என்பதற்கு ஆதாரமாகத் தற்போது வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

'பிக்பாஸ்' நடிகையின் படத்தை புரமோஷன் செய்த பா.ரஞ்சித்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா என்பதும் அவர் கடைசிவரை போட்டியிலிருந்து, இறுதியில் ரன்னராக வெற்றி பெற்றவர் என்பதும் தெரிந்ததே.

சென்சார் ஆனது சூரரை போற்று: ரிலீசுக்கு தயார் என அறிவிப்பால் பரபரப்பு

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது