நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,August 30 2018]

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் குளறுபடி இருந்ததால் 196 மதிப்பெண்கள் தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதன்படி 196 கருணை மதிப்பெண் வழங்கினால் ஒருசில மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுவிடுவார்கள் என்றும், மேலும் தமிழில் கேள்விகள் குளறுபடியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் சரியாக இருந்ததாகவும், அதனால் கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்றும் சி.பி.எஸ்.இ வாதாடியது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் சரியாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க தேவையில்லை என்றும் சி.பி.எஸ்.இ வழக்கரிஞர் வாதாடினார்.. மாணவர்களுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்றால் ஏன் மற்ற மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சி.பி.எஸ்.இ வழக்கரிஞரை கேட்டனர். இருப்பினும் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களுக்கு கூடுதலாக வழங்க முடியாது என்று உத்தரவிட்டனர்.. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More News

ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்: அழகிரியின் அந்தர் பல்டி

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்று கூறப்பட்டது.

சூர்யாவின் என்.ஜி.கே' தீபாவளி ரிலீஸா? அதிகாரபூர்வ தகவல்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கும் வரும் என்று சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

மனம் மாறிய நித்யா: பிக்பாஸ் செய்த ஒரே உருப்படியான விஷயம்

கடந்த இரண்டு மாதங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர எத்தனையோ முயற்சி எடுத்தும் தோல்வியில்தான் முடிந்தது. கடைசியில் மகத்தின் வெளியேற்றமும்,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியா? கமல் பதில்

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் காலமானதை அடுத்து இந்த இரு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது.

நான் அப்பா ஆயிட்டேன்: உணர்ச்சிவசப்பட்ட செண்ட்ராயன்

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவராகிய செண்ட்ராயன், அப்பாவி போல் தெரிந்தாலும் பல விவரமானவர்களை மீறி மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். 70 நாட்களையும் தாண்டி அவர் பிக்பாஸ் வீட்டில்