நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,August 30 2018]

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் குளறுபடி இருந்ததால் 196 மதிப்பெண்கள் தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதன்படி 196 கருணை மதிப்பெண் வழங்கினால் ஒருசில மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுவிடுவார்கள் என்றும், மேலும் தமிழில் கேள்விகள் குளறுபடியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் சரியாக இருந்ததாகவும், அதனால் கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்றும் சி.பி.எஸ்.இ வாதாடியது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் சரியாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க தேவையில்லை என்றும் சி.பி.எஸ்.இ வழக்கரிஞர் வாதாடினார்.. மாணவர்களுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்றால் ஏன் மற்ற மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சி.பி.எஸ்.இ வழக்கரிஞரை கேட்டனர். இருப்பினும் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களுக்கு கூடுதலாக வழங்க முடியாது என்று உத்தரவிட்டனர்.. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.