இனிமேல் விவாகரத்து செய்ய மாட்டேன்.. வனிதா விஜயகுமார் பேட்டியால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!
- IndiaGlitz, [Wednesday,July 19 2023]
நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து செய்த நிலையில் இனிமேல் விவாகரத்து செய்ய மாட்டேன் எனக் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்த வனிதா, 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதேபோல் 2007ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்த வனிதா, அவரையும் 2012ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். மேலும் பீட்டர் பால் என்பவரை மீண்டும் திருமணம் செய்ததாக கூறப்பட்டாலும் அதை வனிதா மறுத்திருந்தார்.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் மீண்டும் திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’திடீரென தான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் இனிமேல் விவாகரத்து செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தன்னுடைய திருமணம் சினிமாவுடனானது என்றும் இனி சினிமாவில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்துவேன் என்பதால் இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் இன்னொரு திருமணம் மற்றும் விவாகரத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.