இனி, கொரோனா நோயாளிகளைப் பயப்படாமல் அழைத்துச் செல்லலாம்!!! மருத்துவர்கள் உருவாக்கிய புதிய வாகனம்!!!

  • IndiaGlitz, [Monday,April 06 2020]

மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கும்போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது. இதனால் சில மருத்துவ ஊழியர்கள் பயத்தோடு இருக்கவேண்டிய கட்டாயமும் இருந்துவருகிறது. இத்தாலியில் இதுவரை 70க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். இந்தியாவிலும் 4 மருத்துவர்கள் சிகிச்சையின்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவர்களைவிட நர்ஸ், சுகாதாரப் பணியாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாக்பூரின் Aureus மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு புதிய வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இந்த வாகனத்தை பயன்படுத்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிமையாக இடமாற்றம் செய்யலாம். இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள படுக்கையின் மீது ஒரு வெளிப்படையான உறை காணப்படுகிறது. இந்த உறை கொரோனா வைரைஸால் பாதிக்கப்பட்ட நோயாளின்மீது போர்த்தப்படும். போர்வையால் முழுவதும் மூடப்பட்டு பயணம் மேற்கொள்ளும்போது வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் அபயாம் தடுக்கப்படுகிறது. இதே வழிமுறையை இறந்தவர்களின் பிணங்களை அகற்றும்போதும் பயன்படுத்த முடியும்.

நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரு தனி வாகனத்தையே Aureus மருத்துவர்கள் வடிவமைத்துள்ளர். தற்போது மருத்துவர்களின் இந்த முயற்சிக்குப் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.