ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எந்த அமைச்சரும் பார்க்கவில்லை: ஆனந்த்ராஜ்

  • IndiaGlitz, [Friday,December 29 2017]

நடிகரும் அதிமுக அனுதாபியுமான ஆனந்த்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து வெளியேறினார். கட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவ்வப்போது தனது அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எனக்கு தெரிந்தவரை ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை எந்த அமைச்சரும் பார்க்கவில்லை. டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதா என்னும் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா பழச்சாறு குடிப்பது போன்ற அந்த வீடியோவில் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடவில்லை.  

எனவே வீடியோ விவகாரம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் உண்மையை வெளி கொண்டுவர வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சசிகலாவிடம் ஆணையம் விளக்கம் கேட்டதற்கு பாராட்டுக்கள்.

தமிழக அரசு செயல்படவில்லை என்பதை விட, அவர்களை செயல்படவிட வேண்டும் என்பதே எனது கருத்து. மேலும் ஆர்.கே.நகரில் தினகரன் மாயாஜாலம் செய்து வெற்றி பெற்று விட்டார். தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக தொண்டர்கள்  வேட்கப்பட வேண்டும். இவ்வாறு ஆனந்த்ராஜ் கூறினார்.

More News

முதல்முறையாக தமிழ் படத்தில் உயிருள்ள சிம்பன்ஸி குரங்கு

நடிகர் ஜீவா நடிக்கும் அடுத்த படத்திற்கு 'கொரில்லா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் அர்ஜூன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கவுள்ளார்

அரசியல், சினிமாவில் காலம் வரும்போது மாற்றமும் வரும்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நான்காவது நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக அவர் ரசிகர்கள் முன் பேசியதாவது:

மணிரத்னத்தை அடுத்து சிம்புவுடன் இணணயும் வெற்றிப்பட இயக்குனர்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மல்டிஸ்டார் திரைப்படம் வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் இன்னொரு வெற்றி பட இயக்க்குனர் தான் இயக்கும் அடுத்த படத்தில் சிம்புவை இயக்குவார்

தனுஷ் இயக்கும் 2வது படத்தில் பிரபல நடிகர்

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த 'பவர் பாண்டி' திரைப்படம் வெற்றிப்படமாக இருந்தது மட்டுமின்றி நல்ல வசூல் செய்த படங்களின் பட்டியலிலும் இணைந்தது.

விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம்: வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்

பாரத நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காத நிலையில் விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும்