500க்கு 498 மதிப்பெண் எடுத்த மாணவியை கண்டுகொள்ளாத மீடியா.. கெளரவப்படுத்திய விஜய்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை எந்த மீடியாவும் கண்டு கொள்ளாத நிலையில் முதல் முறையாக நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த கல்வி விழாவில் அந்த மாணவியை கௌரவப்படுத்திய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
பவானியை சேர்ந்த மாணவி மனு வர்ஷா என்பவர் சமீபத்தில் நடந்த 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 498 மதிப்பெண் பெற்றுள்ளார். இது குறித்து அவரது தந்தை கூறிய போது ’என்னுடைய மகள் செய்த சாதனையை எந்த ஊடகமும் கண்டு கொள்ளவில்லை, யாரும் பேட்டி எடுக்க வரவில்லை, இது எனக்கும் எனது மகளுக்கும் ரொம்ப வருத்தமாக இருந்தது
என்னுடைய மகளை விட குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் எல்லாம் பேட்டி கொடுத்த போது மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்த என் மகளை யாரும் பேட்டி எடுக்க வரவில்லை என்ற வருத்தம் இருந்தது. ஆனால் தளபதி விஜய் அவர்கள் அந்த குறையை தீர்த்து விட்டார், ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கல்வி விழாவில் நடிகர் விஜய் மாணவி மனு வர்ஷாவை மேடைக்கு அழைத்து கூறியதாவது ’பவானியை சேர்ந்த மனு வர்ஷா 500க்கு 498 மதிப்பெண் உள்ளார். அவருடைய சாதனையை யாரும் கண்டுகொள்ளவில்லை என வருத்தப்பட்டார். அதனால் இந்த சாதனையை என்னுடைய வாயால் சொல்ல ஆசைப்படுகிறேன், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
This moment was so cute❣️😘🤌🏻
— Aíshú🍦(Léõ)🦁🍫 (@AishThalapathy) June 20, 2023
The way he is calling Friends😘Omgggg so cute....♥️#ThalapathyVIJAYBdayCDP #Leo #NaaReady #NaaReadyFirstSingle #ThalapathyVijay pic.twitter.com/XixMkTolK3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments