close
Choose your channels

'கங்குவா' அப்டேட்டே இல்லை.. கடுப்பில் ரசிகர் போட்ட ட்வீட்.. கண்டித்த தயாரிப்பாளர்..!

Tuesday, June 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கடந்த சில வாரங்களாக இல்லை என்பது சூர்யா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் அப்டேட் கூட அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ’கங்குவா’ படத்தின் எந்த அப்டேட்டும் வெளியிடவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் ’கங்குவா’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் சூர்யாவின் ரசிகர் ஒருவர், ’கங்குவா’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் வெளியாகும் என்று தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்த ரசிகரை கண்டித்துள்ளார். ஏன் இந்த மாதிரி பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள்? என்று அவரை கண்டித்து உள்ள நிலையில் அந்த ரசிகர் ’விளையாட்டாக தான் இப்படி ஒரு பதிவு, ’கங்குவா’ குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் போரடித்தது’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.