அர்னாப் கோஸ்வாமிக்கு எந்த இந்தியனும் உதவக்கூடாது: தற்கொலை செய்த பொறியாளரின் மகள்!
- IndiaGlitz, [Wednesday,November 04 2020]
ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இன்று காலை அதிரடியாக மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரது கைதுக்கு பத்திரிகை துறையினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட பொறியாளரும் அன்வி நாயக் என்பவரின் தற்கொலை தான் காரணம் என்றும் அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதத்தில் அர்னாப் கோஸ்வாமி தனக்கு தரவேண்டிய 5.8 கோடி ரூபாயை தராததால் நிதி நெருக்கடி காரணமாகத்தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்தே அர்னாப் கோஸ்வாமி இன்று போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த அன்வி நாயக் மனைவி மற்றும் மகள் சில கருத்துக்களை பத்திரிகையாளர்கள் முன் தெரிவித்தனர். குறிப்பாக அன்விக் நாயக் மகள் தனது பேட்டியில் ’அர்னாப் கோஸ்வாமி ரவுடிகளை வீட்டு அனுப்பி எங்களை மிரட்டினார் என்றும் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார் என்றும் அவரது கைதுக்காகதான் இத்தனை மாதங்கள் காத்திருந்தோம் என்றும் கூறியுள்ளார். மேலும் எனது தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அதனால் அர்னாப் கோஸ்வாமிக்கு எந்த இந்தியனும் உதவி செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அன்வி நாயக்கை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மும்பை போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.