சென்னையில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் இருக்காது: நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Thursday,June 20 2019]
சென்னையில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் இருக்காது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளதால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சென்னையில் தற்போதே பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டதால் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர்ப்பஞ்சம் வரலாறு காணாத வகையில் தலைவிரித்தாடி வருகிறது
இந்த நிலையில் சென்னை, டெல்லி, பெங்களூர் உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் இருக்காது என நிதி ஆயோக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீர் இல்லாததால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
மனிதர்கள் உயிர்வாழ முக்கிய தேவைகளில் ஒன்றான தண்ணீர் இல்லை என்றால் சென்னை மக்கள் நகரத்தை காலி செய்துவிட்டு அவரவர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலைதான் ஏற்படும். அதற்குமுன், இனிமேலாவது மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் சிக்கனம், நீர்நிலைகளை பாதுகாத்தல் ஆகியவற்றில் பொதுமக்களும் அரசும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது