$100 மில்லியன் பட்ஜெட் படம்.. ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட இல்லை: ஜூலை 21ல் ரிலீஸ்..!
- IndiaGlitz, [Saturday,July 08 2023]
100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டு வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகிய ‘OPPENHEIMER' என்ற படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட இல்லை என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ஹாலிவுட் திரைப்படம் என்றால் அதில் பாதிக்கு மேல் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்பதும் அதற்காகவே மில்லியன் கணக்கில் செலவு செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.
ஆனால் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘OPPENHEIMER' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி கூட கிராபிக்ஸ் காட்சி இருக்கக் கூடாது என்று அவர் தனது படக்குழுவினர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
அணுகுண்டுகளின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமர் என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் இந்த படம் என்பதும் இந்த படம் ஜூலை 21ஆம் தேதி இந்தியா உட்பட உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.