சென்னையில் முழு ஊரடங்கா? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
- IndiaGlitz, [Friday,June 12 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் தினந்தோறும் மிக அதிகமாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் மொத்த மதிப்பில் 80 சதவீதத்துக்கும் மேல் சென்னையில்தான் பாதிப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது. இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கொன்றில் சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்தும் திட்டம் உள்ளதா? என்பதை தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தமிழகத்தில் கொரோனா நிலைமை குறித்து அரசின் குழு ஆய்வு செய்துவருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இபாஸ் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்த தமிழக அரசு சென்னையில் இருந்து வெளியே செல்பவர்கள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிபடக் கூறி உள்ளதால் சென்னையில் முழு ஊரடங்கு என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.