சென்னையில் முழு ஊரடங்கா? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் தினந்தோறும் மிக அதிகமாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் மொத்த மதிப்பில் 80 சதவீதத்துக்கும் மேல் சென்னையில்தான் பாதிப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது. இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கொன்றில் சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்தும் திட்டம் உள்ளதா? என்பதை தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தமிழகத்தில் கொரோனா நிலைமை குறித்து அரசின் குழு ஆய்வு செய்துவருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இபாஸ் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்த தமிழக அரசு சென்னையில் இருந்து வெளியே செல்பவர்கள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிபடக் கூறி உள்ளதால் சென்னையில் முழு ஊரடங்கு என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.
 

More News

பால், ரோஜாப்பூ பாத்டேப்பில் பிரபல நடிகை குளியல்

பாத்டேப்பில் இதுவரை தண்ணீர் மற்றும் சோப்பு நுரையை வைத்து தான் குளிப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் பிரபல நடிகை ஒருவர் பாத்டேப்பில் பால் மட்டும் ரோஜா பூ வைத்து அதில் குளியல் போட்டு

சாகவும் துணிந்த ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷூக்காக சாகவும் தயார் என கூறிய ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இங்கிலாந்து, இத்தாலியை பின்னுக்கு தள்ளியது இந்தியா: ஒருநாள் பாதிப்பில் 3வது இடம்

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா உலக அளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

ஹோட்டல் உரிமையாளருக்கு 1446 ஆண்டு சிறை!!! அப்படி என்ன செய்தார் தெரியுமா???

தாய்லாந்து நாட்டில் ஒரு ஹோட்டல் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்து வதற்காக எடுத்த முடிவு தற்போது அவர்களுக்கே பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.

இந்த நாட்டில் மட்டும் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழப்பார்கள்- முன்னணி நிபுணர் கூறிய அதிர்ச்சி தகவல்!!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் மகக்ள் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.