கலவரத்திற்கு நடுவே பாரிஸ் பறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி… ரசிகர்களுக்கு விடுத்த செய்தி?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்கு பிறகு பாரிஸ் சென்றிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளதோடு அங்குள்ள நிலவரத்தைக் குறித்தும் ஒருசில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்த நடிகை ஹன்சிகா தொடர்ந்து 2007 இல் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா இயக்கிய ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.
தமிழைப் போலவே சில தெலுங்கு, கன்னடம் என 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்ட இவர் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 2022இல் தனது நீண்டநாள் காதலர் சோஹேல் கதுரியாவை கரம்பிடித்தார். தொடர்ந்து தனது குடும்பம் மற்றும் சினிமா என்று பிசியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் அவர் தற்போது பிரான்ஸ் முழுக்க சுற்றுலா சென்றுள்ளதாகவும் பாரிஸ் நகரில் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ள நிலையில் ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிலளித்த நடிகை ஹன்சிகா கலவரங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். சுற்றுலா பயணிகளுக்கு தற்போது ஏற்ற சூழல் காணப்படுகிறது என்று கூறியதோடு பாரிஸ் நகருக்கும் தனக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினையும் தெரிவித்துள்ளார்.
அதில் நாங்கள் எப்போதும் வருடத்திற்கு ஒருமுறை குடும்பமாக சுற்றுலா செல்வோம். பொதுவாக அது என் அம்மாவின் பிறந்த நாளாக இருக்கும் என்று கூறிய நடிகை ஹன்சிகா இந்த முறை பிரான்ஸ் நாட்டை தேர்வு செய்திருக்கிறோம். காரணம் இது உலகில் எனக்கு மிகவும் பிடித்த நகரங்களில் ஒன்று என்று வெள்ளிக்கிழமை ஒரு பதிவில் நடிகை ஹன்சிகா தெரிவித்து இருந்தார்.
மேலும் நாங்கள் பிரான்ஸ் முழுவதற்கும் செல்கிறோம். சிறிது நேரத்திற்கு முன்பு நகரின் புறநகர்ப் பகுதிகள் வன்முறையால் ஆக்கிரமிக்கப்பட்டது. முன்னதாக போக்குவரத்து நிறுத்தத்தின்போது ஒரு காவலர் ஒரு இளைஞனை சுட்டுக் கொன்றதை அடுத்து ஆங்காங்கே கலவரம் வெடித்து வருகிறது. இது சுற்றுலா பயணிகளிடையே அச்ச அலையை ஏற்படுத்தியது. ஆனாலும் நாங்கள் திட்டங்களை மாற்றவில்லை.
எனது கணவர் சோஹேல் கதுரியா இதே நகரத்தில் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தினார். அதனால் திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு பாரிஸ்க்கு செல்வதில் அதிக உற்சாகமாக இருக்கிறார்.
பாரிஸ் என இதயத்திற்கு மிகவும் பிடித்த இடம். அங்கு என் கணவர் என்னிடம் காதலை முன்மொழிந்து சுமார் 11 மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த நினைவு இன்னும் என் மனதில் மிகவும் பசுமையாக இருக்கிறது. மேலும் என் இதயத்தில் எல்லாவிதமான உணர்வுகளையும் தூண்டுகிறது.
பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து கலவரங்கள் ஆங்காங்கே வெடித்து வருகின்றன. ஆனாலும் சுற்றுலா பயணிகளுக்கு இது பாதுகாப்பானது. எல்லோரிடமும் இந்த உணர்வை ஏற்படுத்துவதைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. சமீபத்தில் பாரிஸ் நகரில் ஃபேஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. செல்வது பாதுகாப்பானது. அதனால்தான் நாங்கள் திட்டங்களை மாற்றவில்லை என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பாரிஸ்-இன் புறநகர் பகுதியான நான்டென் பகுதியில் 17 வயது இளைஞர் ஒருவரை காவல் துறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்றார். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் கறுப்பின மக்களுக்கு எதிராகவும் அரபு மக்களுக்கு எதிராகவும் காவல் துறையினர் அதிகாரத்தை செலுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 17 வயது சிறுவன் நஹேலை சுட்டுக்கொன்றதை அடுத்து பாரிஸ் நகரத்திற்கு வெளியே கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கலவரங்கள் வெடித்து வருகின்றன. இத்தகைய கலவரங்களுக்கு நடுவில் நடிகை ஹன்சிகா தனது கணவர் மற்றும் அம்மாவுடன் அந்த நகரத்தில் தங்கியிருக்கிறார்.
மேலும் இந்த நகரம் எனது மனதிற்கு நெருக்கமானது. கடந்த வருடம் எனது கணவர் இந்த இடத்தில்தான் தனது காதலை வெளிப்படுத்தினார். தற்போது சுற்றுலா பயணிகளுக்கு இது பாதுகாப்பாகவே இருக்கிறது எனக் கூறி இன்ஸ்டா ஸ்டோரியில் நடிகை ஹன்சிகா பதிவிட்டு இருக்கும் தகவல்கள் ரசிகர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments